அழகுக் குறிப்புகள்

நெற்றியில் வைக்கும் பொட்டு: முக அமைப்பிற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுப்பது எப்படி?

பொட்டு வைக்கும் போது இரு பிருவங்களுக்கிடையே அழுத்துவதால் தலைவலி மற்றும் மனஅழுத்தம் குறையும்.

பெண்களின் பாரம்பரிய அழகிற்கு நெற்றியில் வைக்கும் பொட்டு எப்போதுமே தனித் தோற்றத்தைத் தரும். நாம் அணியும் உடைக்கு ஏற்ப பொட்டுகளைத் தேர்ந்தெடுப்பது போலவே, நமது முக அமைப்பிற்கும் பொருத்தமான வடிவங்களில் பொட்டு வைக்கும் போதுதான் முகம் இன்னும் எடுப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

பொட்டு வைப்பதன் நன்மைகள்..

இரு பிருவங்களுக்கிடையில் பொட்டு வைப்பதால், இப்பகுதியில் உள்ள முக்கிய நரம்புகள் தூண்டப்படுவதால் ரத்த ஓட்டம் சீராகி, ஞாபக சக்தியும் கவனத்திறனும் அதிகரிக்கிறது. பொட்டு வைக்கும் போது இரு பிருவங்களுக்கிடையே அழுத்துவதால் தலைவலி மற்றும் மனஅழுத்தம் குறையும்.

வட்ட வடிவ முகம்..

வட்டமான முக அமைப்பு கொண்டவர்கள் தங்களின் முகம் சற்று நீளமாகக் காட்டுவதற்கேற்ற பொட்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். நீள வடிவப் பொட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் முகம் பெரிய முகம் போல் தெரியாது. முகத்துக்கேற்றார் போல் அழகாக இருக்கும்.

ஓவல் வடிவ முகம்..

ஓவல் வடிவம் கொண்ட முகங்களுக்கு அனைத்து பொட்டுகளும் கச்சிதமாக இருக்கும். பாரம்பரியமான வட்ட வடிவ பொட்டுக்கள் இவர்களுக்கு மிகவும் நேர்த்தியான லுக் தரும். சதுரம், நீளம், முக்கோணம் என எந்த வடிவப் பொட்டுகளையும் தைரியமாக வைக்கலாம்.

சதுர வடிவ முகம்..

தாடைப் பகுதி சற்று அகலமாகத் தெரியும் சதுர முகம் கொண்டவர்கள், முகத்தின் கூர்மையைக் குறைத்துக் காட்ட மென்மையான வடிவங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நடுத்தர அளவுள்ள வட்ட வடிவப் பொட்டுகள் மற்றும் அரை நிலா வடிவப் பொட்டுகள் வைத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரியும்.

விசேஷங்களுக்கான பொட்டுக்கள்..

நாம் விசேஷங்களுக்காக வெளியே செல்லும் பொது நமது முகத்தை பளீச்சென்று காட்டக்கூடியதே நம் முகத்தில் இருக்கும் பொட்டு தான். பலவடிவங்களில் இருக்கும் முகத்திற்கேற்ற மாதிரி கல் பதித்த பொட்டுக்கள், டிசைன் பொட்டுக்கள், டைமண்ட் ஷேப்பில் இருக்கும் பொட்டுகளை வைத்தால் முகம் ஜொலிக்கும்.