நிறைய பேருக்கு நகங்களுக்கு விதவிதமா நெயில் பாலிஷ் போடுறது ரொம்ப பிடிக்கும். ஆனா, போட்ட சில நாட்களிலேயே அது உரிய ஆரம்பிச்சிடும்.
உங்க நெயில் பாலிஷ் ரொம்ப நாளைக்கு அழகா நீடிச்சிருக்கவும், நகங்கள் ஆரோக்கியமா இருக்கவும் இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
நகத்தை இந்த ஷேப்ல கட் பண்ணுங்க..
நகத்தோட எட்ஜ ஓவல் ஷேப்ல கட் பண்ணுனீங்கனா அது உங்களுக்கு கிளாசிக் லுக் தரும்.
அதுவே நகத்தோட நுனியை நேராக கட் பண்ணா ஸ்கொயர் ஷேப்ல இருக்கும்.அது உங்களுக்கு மாடர்ன் லுக் தரும்.
நகத்தின் ஓரங்களை நன்றாகக் குறைத்து, நுனியை மட்டும் லைட்டாக ஷார்ப் பண்ணீங்கனா ஆல்மண்ட் ஷேப்ல ரிச் & ஸ்டைலிஷ் லுக் தரும்.
நகங்களைச் சுத்தம் செய்யுங்க..
நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்னாடி, நகங்களில் இருக்கும் பழைய நெயில் பாலிஷை ரிமூவ் பண்ணிடுங்க. நெயில் பாலிஷ் ரிமூவர் வச்சு நல்லா நகத்தை தொடச்சிருங்க.
நகம் சுத்தமா இருந்தால்தான் நெயில் பாலிஷ் பளபளப்பா இருக்கும்.
நகம் மஞ்சளா மாறுதா?
நெயில் பாலிஷை ரொம்ப நாள் அப்படியே விட்டுட்டா நகத்தோட இயற்கையான கலர் மாறி, ஒரு மாதிரி மஞ்சள் கலர் ஆகிடும். இதை தவிர்க்க, நெயில் பாலிஷ் போடுறதுக்கு முன்னாடி 'பேஸ் கோட்' அப்படின்ற டிரான்ஸ்பரண்ட் லேயரை முதல்ல போடுங்க.
அதுக்கப்புறம் உங்களுக்கு பிடிச்ச கலரை அடிச்சீங்கன்னா நகம் மஞ்சளாகாது.
கிளிட்டர் எட்ஜஸ்..
நகம் முழுக்க நார்மல் மேட் கலர் நெயில் பாலிஷ் போட்டுட்டு, நகத்தோட எட்ஜ்ல மட்டும் லைட்டா கிளிட்டர் பாலிஷ் வச்சீங்கன்னா, பார்ட்டிக்கு போறதுக்கு சூப்பரான, ட்ரெண்டியான லுக் ரெடி ஆயிடும்.
இயற்கையான நகம் பராமரிப்பு..
உங்க நகங்கள் நல்லா பளபளப்பாவும், ஸ்ட்ராங்காகவும் இருக்கணும்னா, வாரத்துக்கு ரெண்டு தடவை கொஞ்சமா தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை நகங்கள் மற்றும் அதை சுத்தி இருக்கிற சதையில தடவி மசாஜ் பண்ணுங்க. நகம் சூப்பரா வளரும்!