அழகுக் குறிப்புகள்

விழித்திரை விசித்திரம்: ஏன் சிலருக்குக் கண்களின் கருவிழிகள் நிறம் மாறுகிறது?

வெளிச்சத்திற்கேற்ப கூட கண்களில் நிறங்கள் மாறலாம்.

மனித உடலின் மிக முக்கியமான மற்றும் அழகான உறுப்பு கண்கள். சிலருக்குப் பிறக்கும் போது ஒரு நிறத்திலும், வளர வளர வேறு நிறத்திலும் கருவிழிகள் மாறுவதை நாம் பார்த்திருப்போம்.

இந்த நிறம் மாற்றத்திற்கு அறிவியல் காரணங்கள் மற்றும் கண்களைப் பொலிவாக வைக்க உதவும் அழகு குறிப்புகளும் உண்டு.

நிறம் மாறுவதற்குப் பின்னணியில் உள்ள அறிவியல்

மெலனின் அளவு நமது தோல் மற்றும் முடியின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் பிக்மெண்ட் தான் கண்ணின் நிறத்திற்கும் காரணம்.

மெலனின் அதிகமாக இருந்தால் கருப்பு அல்லது பழுப்பு நிறத்திலும், குறைவாக இருந்தால் நீலம் அல்லது பச்சை நிறத்திலும் கருவிழிகள் தெரியும் மரபணுக்கள் மற்றும் வயது பெற்றோரின் மரபணுக்களின் சேர்க்கையைப் பொறுத்து, குழந்தைகளின் வளரும் பருவத்தில் கருவிழியின் நிறம் மாறலாம்.

வயது கூடும் போது உடலில் மெலனின் உற்பத்தி மாறுபடுவதாலும் கண்கள் லேசான சாம்பல் நிறத்திற்கு மாறக்கூடும்.

வெளிச்சமும் ஆடைகளும் தரும் மேஜிக்

ஒளி பிரதிபலிப்பு நாம் இருக்கும் இடத்தின் வெளிச்சம் மற்றும் நாம் அணியும் ஆடையின் நிற பிரதிபலிப்பு காரணமாகவும் சில நேரங்களில் கருவிழிகள் தற்காலிகமாக வேறு நிறத்தில் தோற்றமளிக்கும்.

பகலும் இரவும் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் போது ஒரு நிறமாகவும், வீட்டுக்குள் சாதாரண விளக்கு வெளிச்சத்தில் இருக்கும் போது கண்கள் வேறு நிறமாகவும் தெரிவதற்கு இந்த ஒளியின் சிதறலே காரணம்.

கலர் காண்டாக்ட் லென்ஸ்

ட்ரெண்டிங் நிறங்கள் இயற்கையாக நிறம் மாறுவது ஒருபுறமிருக்க, இன்றைய இளம் பெண்கள் தங்களின் கண்கள் தனித்துவமாகத் தெரிய 'கலர்டு காண்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்துவதை ஒரு முக்கிய ஃபேஷன் அடையாளமாக மாற்றியுள்ளனர்.

டாப் சாய்ஸ் குறிப்பாக ஹேசல், க்ரே, பச்சை மற்றும் ப்ளூ நிற லென்ஸ்கள் தற்போது மார்க்கெட்டில் செம ட்ரெண்டிங்கில் உள்ளன. ஆதலால் பெண்கள் இதை வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.

கண்களை பொலிவாக்கும் பியூட்டி டிப்ஸ்

கருவிழி எந்த நிறமாக இருந்தாலும், கண்கள் ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் இருப்பதுதான் உண்மையான அழகு.

கண்கள் சோர்ந்து போவதைத் தவிர்க்க, வெள்ளரிக்காய் துண்டுகள் அல்லது குளிர்ந்த உருளைக்கிழங்கு சாற்றை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் 15 நிமிடங்கள் வைக்கலாம்.

பயன்படுத்திய கிரீன் டீ பேக்குகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பின் கண்களின் மேல் வைத்தால் கருவளையங்கள் மற்றும் கண் வீக்கம் குறையும்.

சிறிதளவு சுத்தமான கற்றாழை ஜெல்லைக் கண் இமைகளைச் சுற்றி மசாஜ் செய்து வந்தால், கண்கள் குளுகுளுவென இருக்கும். இது கண்களுக்கு மிகவும் நல்லது.

கவனிக்க வேண்டியவை

நீங்கள் அதிகமாகி கண்களுக்கு மேக்கப் செய்பவர்களாக இருந்தால் கண்களுக்கு லென்ஸ் போடுபவர்கள், மேக்கப் போடுவதற்கு முன்பே லென்ஸை அணிந்துவிட வேண்டும்.

கண் எரிச்சலைத் தவிர்க்க தரமான காஜல் மற்றும் ஐலைனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன் கண் மேக்கப்பை முழுமையாகக் கலைப்பது மிக முக்கியம்.

*கண் எரிச்சல், கண்களில் வீக்கம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு அணிய வேண்டும்*.