அழகுக் குறிப்புகள்

உங்க கலருக்கு எந்த லிப்ஸ்டிக் செட்டாகும்னு தெரியலையா? இதோ சிம்பிள் ட்ரிக்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் கச்சிதமான லிப்ஸ்டிக் ஷேட்ஸ்!

மேக்கப் போடும்போது பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான குழப்பம், எந்த கலர் லிப்ஸ்டிக் தங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதுதான்.

நமது சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற சரியான லிப்ஸ்டிக் ஷேடைத் தேர்ந்தெடுத்தால், அது முகத்தின் பொலிவை இன்னும் அழகாகக் காட்டும்.

மாநிறமாக இருக்கும் பெண்கள்..

மாநிறமாக உள்ள பெண்கள் இந்த ஷேட்ஸ் பயன்படுத்துங்க அழகா கச்சிதமா இருக்கும்..

செர்ரி ரெட், ரோஸ் பிங்க், ரெட் மற்றும் மெரோன் ஆகிய நிறங்கள் இவர்களுக்கு மிக நேர்த்தியான தோற்றத்தைத் தரும். பார்ட்டி மற்றும் விசேஷங்களுக்கு போகும் போது ஒயின் கலர் போட்டுட்டு போங்க செம்ம ராயல் லுக் தரும்.

தவிர்க்க வேண்டிய கலர்ஸ் மிகவும் வெளிர் நிறங்களை பயன்படுத்தினால் முகம் பொலிவிழந்து டல்லாகத் தெரியும். எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.

அடர் மாநிறத்தில் இருக்கும் (Dusky tone) பெண்கள்..

கருப்பா இருந்தாலும் கச்சிதமான கலர் யூஸ் பண்ணுனீங்கனா... நல்லா ரிச் லுக் தரும்..உங்க சருமத்திற்கு ஏற்ற லிப்ஸ்டிக் ஷேட்ஸ்..

சாக்லேட் பிரவுன், டார்க் மெரூன், பிளம் மற்றும் ஒயின் நிறங்கள் இவர்களுக்கு மிகவும் எடுப்பாகப் பொருந்தும்.

வெண்மை நிறம் கொண்ட பெண்கள்..

தவிர்க்க வேண்டிய கலர்ஸ் பிரகாசமான நியான் பிங்க் மற்றும் கோல்டன் போன்ற ஷேட்ஸ் தவிர்த்தால் நல்லது.

லைட் பிங்க், பீச், கோரல் மற்றும் பிரகாசமான சிவப்பு நிறங்கள் இவர்களுக்குப் பளிச்சென்று பொருந்தும்.

மிகவும் டார்க் பிரவுன் அல்லது பிளாக் கலந்த நிறங்களைத் தவிர்த்தால் முகம் இன்னும் மென்மையாகத் தெரியும்.

ஒரு குட்டி சீக்ரெட் டிப்ஸ் !

லிப்ஸ்டிக் போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உதடுகளில் ஈரப்பதத்திற்காக ஒரு நல்ல லிப் பாம் தடவுங்கள். இது உதடு வறண்டு போவதைத் தடுக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை சிறிதளவு சர்க்கரை மற்றும் தேன் கலந்து உதடுகளில் மென்மையாகத் தேய்த்தால், உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி உதடு மென்மையாகும்.