அழகுக் குறிப்புகள்

பாதாம் பிசின் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் இவ்வளவு நல்லதா? இது தெரியாம போச்சே..

பாதாம் மரத்தின் தண்டுகளில் இருந்து வடியும் இயற்கைப் பசை பாதாம் பிசின்

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வறண்ட சருமத்தை மீட்டு பளபளப்பாக மாற்றவும் இயற்கை நமக்குத் தந்த கொடைதான் பாதாம் பிசின்.

பாதாம் மரத்தின் தண்டுகளில் இருந்து வடியும் இந்த இயற்கைப் பசை, தற்காலத்தில் மிகச்சிறந்த இயற்கை அழகுப் பொருளாகவும், நோய் எதிர்ப்பு அரணாகவும் மாறி வருகிறது.

பாதாம் பிசினைக் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தையும் அழகையும் அதிகரிக்கலாம்.

ஆரோக்கியத்திற்காக..

உடல் சூட்டைத் தணிக்கும் இயற்கை குளிரூட்டி:

இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த பாதாம் பிசினை, மறுநாள் காலையில் பாலில் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள அதிகப்படியான பித்தம் மற்றும் உடல் சூடு முற்றிலும் தணியும். உடலுக்கு மிகவும் நல்லது.

நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு முற்றுப்புள்ளி:

காரமான உணவுகளால் ஏற்படும் வயிற்று எரிச்சல், அல்சர் மற்றும் குடல் புண்களைக் குணப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் வழுவழுப்புத் தன்மை குடலுக்குப் பாதுகாப்புத் தரும்.

உடல் எடை

இதனை இளஞ்சூடான பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஒல்லியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக உடல் எடை கூடிம். அதே சமயம், தண்ணீரில் கலந்து சாப்பிடும் போது பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்க உதவும்.

எலும்புகளை வலுவாக்கும் கால்சியம்:

பாதாம் பிசினில் அதிகப்படியான கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், வளர்ந்து வரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் மற்றும் தசைகள் நல்ல வலிமை பெறும்.

அழகிற்காக..

வறண்ட சருமம் நீங்கி பளபளக்க:

இரவு ஊறவைத்த 2 ஸ்பூன் பாதாம் பிசின் ஜெல்லுடன், சிறிதளவு காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் தக்காளி போல பளபளக்கும்.

முகச்சுருக்கம் நீக்கும்

பாதாம் பிசின் ஜெல்லுடன் கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால், தொய்வடைந்த தோல்கள் இறுக்கமாகி இளமையான தோற்றம் கிடைக்கும்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறைய

பாதாம் பிசின் ஜெல்லுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்துப் பருக்கள் உள்ள இடங்களில் தடவி வந்தால், பருக்களின் வீக்கம் குறைந்து தழும்புகள் இல்லாமல் முகம் சுத்தமாகும்.

பயன்படுத்தும் முறை:

பாதாம் பிசின் துண்டுகளை 8 முதல் 10 மணி நேரம் சுத்தமான தண்ணீரில் ஊற வைத்தால், அது ஜெல்லி போல மாறும். அதன் பிறகே அதனை உணவிலோ அல்லது முகத்திலோ பயன்படுத்த வேண்டும். அப்படியே பயன்படுத்த கூடாது.

SCROLL FOR NEXT