இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் முக அழகில் பெரும் சவாலாக இருப்பது மூக்கைச் சுற்றி தோன்றும் கரும்புள்ளிகள் தான். மாசடைந்த காற்று, இறந்த செல்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பு ஆகியவை இந்த கருமைக்கு முக்கிய காரணம்.
தேவையற்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்தினால் செலவும் இல்லை, அதற்கான பயன் பெறுவீர்கள்.
ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் அரசி மாவு சேர்த்து ஒரு பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை மூக்கைச் சுற்றி கருமையாக உள்ள இடங்களில் தடவி, 15 நிமிடங்கள் அப்படியே காய வைக்க வேண்டும்.
பின்னர் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவினால், அங்குள்ள இறந்த செல்கள் நீங்கி கரும்புள்ளிகளை அகற்றும். வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு,
இந்த கலவையை மூக்கின் மீது தடவி விரல்களால் வட்ட வடிவில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
இது துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி, கரும்புள்ளிகளை வேரோடு வெளியேற்ற உதவும். வாரத்திற்கு இருமுறை இதைச் செய்யலாம்.
உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். காட்டன் துணியில் இந்த சாற்றை நனைத்து, மூக்கைச் சுற்றி தடவி வர வேண்டும்.
உருளைக்கிழங்கில் உள்ள இயற்கையான பிளீச்சிங் பண்புகள், மூக்கைச் சுற்றியுள்ள பிடிவாதமான கருமையை மிக விரைவாகக் குறைக்க உதவுகின்றன.
சுத்தமான கற்றாழை ஜெல்லுடன் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் இந்த ஜெல்லை மூக்கைச் சுற்றி தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.
இது சருமத்தில் ஏற்படும் அலர்ஜி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி கருமையைப் போக்கும்.
மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளை நகங்களால் கிள்ளவோ அல்லது அழுத்தவோ கூடாது. அவ்வாறு செய்தால் அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டு அந்த இடமே கருப்பாக மாறும்.
வெயிலில் செல்லும்போது கண்டிப்பாக தகுந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். சூரியக் கதிர்களின் தாக்கத்தால் மூக்கைச் சுற்றியுள்ள கருமை மேலும் அதிகரிக்கக்கூடும்.