அழகுக் குறிப்புகள்

முடி கொட்டுவதை நிறுத்தி அதிகமாக வளரவைக்கும் ‘வெந்தயம்’! தலையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

இந்த ஹேர் பேக்குகளை 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் தலையில் ஊற வைக்கக் கூடாது.

வெந்தயம் சமையலுக்கு மட்டுமல்ல, கூந்தல் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு மிகச்சிறந்த இயற்கையான ரகசியம்.

இன்றைய காலகட்டத்தில் மாசடைந்த சுற்றுச்சுழல் மற்றும் மனம் அழுத்தம் காரணமாக பலருக்கும் முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு வெந்தயம் நிச்சயமாக ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

வெந்தயத்தை தலைக்கு பயன்படுத்தலாமா?

வெந்தயத்தை தாராளமாக தலைக்கு பயன்படுத்தலாம். வெந்தயத்தில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் நிக்கோடினிக் அமிலம் நிறைந்துள்ளன. இவை முடியின் வேர்கால்களைப் பலப்படுத்தி, முடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கின்றன.

மேலும், இதில் உள்ள லெசித்தின் என்றவை தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பையும், கண்டிஷனர் போன்ற மென்மையையும் தருகிறது.

இளநரையைத் தடுக்க வெந்தயம் + கறிவேப்பிலை பேக்..

இரவில் தேவையான அளவு வெந்தயத்தை ஊற வைத்து விட்டு, காலையில் ஊற வைத்த வெந்தயத்துடன் ஒரு கைப்பிடி அளவு பிரெஷ் கருவேப்பிலையை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை வாரத்திற்கு ஒரு முறை தலையில் தடவி வந்தால், தலையில் இருக்கும் இளநரை மறைந்து முடி கருகருவென மாறும்.

முடி வளர்ச்சிக்கு வெந்தயம் + தேங்காய் எண்ணெய்..

நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை மிதமாக சூடாக்கி, அதில் இரண்டு ஸ்பூன் ஊற வைக்காத வெந்தயத்தை போட்டு அது சிவக்கும் வரைக்கும் காய்ச்ச வேண்டும்.

இந்த எண்ணெயை வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து வந்தால், கூந்தல் நீளமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.

பொடுகு தொல்லையை நீக்க வெந்தயம் + தயிர் பேக்..

இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு வெந்தயத்தை அளவான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து விட்டு, அதனுடன் 2 ஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலக்க வேண்டும்.

இந்த பேக்கை காலையில் தலையின் வேர்க்கால்களில் நன்றாக தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துவிட்டு பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு அடியோடு நீங்கும்.

வறண்ட முடியை மிருதுவாக்க வெந்தய நீர்..

வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

தலையில் ஷாம்பு போட்டு குளித்து முடித்த பிறகு, கடைசியாக வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்து விட்டு தலையை அலசினால் முடி வறண்ட மாதிரி இல்லாமல் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை!

வெந்தயம் இயற்கையிலேயே மிகக் கடுமையான குளிர்ச்சித் தன்மை கொண்டது.