அழகுக் குறிப்புகள்

கண்களைக் கவரும் ஐ ஷேடோ.. நீங்கள் செய்யும் தவறு என்ன?

கண்களுக்கு ஐ ஷேடோஸ் பயன்படுத்தினாலும் அதை நமக்கு ரிச் லுக் கொடுப்பதே ஹைலைட்டர் தான்.

பெண்களின் முக அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது கண்கள் தான். ஒரு விசேஷத்திற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும்போது கண்களுக்கு மேக்கப் போடுவது தற்காலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.

குறிப்பாக, கண்களை எடுப்பாகக் காட்ட உதவும் ஐ ஷேடோ பயன்படுத்தும் கலை பலருக்கும் இன்னும் சவாலாகவே உள்ளது. தவறான முறையில் ஐ ஷேடோவைப் பயன்படுத்தும்போது அது ஒட்டுமொத்த முக அழகையும் பாழாக்கிவிடும்.

'ஐ ப்ரைமர்' பயன்படுத்துங்கள்..

முகத்திற்கு பவுண்டேஷன் போடுவது போல, கண்களுக்கு மேக்கப் போடும் முன் ஐ ப்ரைமர் அல்லது லேசான கன்சீலரை பேஸ் ஆகப் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் கண்களில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, ஐ ஷேடோ நீண்ட நேரம் அழியாமல் அப்படியே இருக்க உதவும்.

சரியான பிரஷ் பயன்படுத்தவும்..

பலர் விரல்களாலேயே ஐ ஷேடோவை அப்ளை செய்வார்கள். இது முற்றிலும் தவறு. ஐ ஷேடோவை கண்களின் மேல் பகுதியில் வைக்க ஒரு பிளாட் பிரஷ் மற்றும் அதனை கச்சிதமாகக் கலந்துவிட ஒரு பிளெண்டிங் பிரஷ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

'பிளெண்டிங்' தான் மெயின்..

ஐ ஷேடோவின் இரண்டு கண்களிலும் வெவ்வேறு நிறங்கள் தனித்தனியாகத் தெரியக்கூடாது. கண்களின் மடிப்புகளில் நிறங்களை நன்றாக ஒன்றுடன் ஒன்று கலந்து விட வேண்டும். அப்போதுதான் கண்கள் இயற்கையான மற்றும் அழகான தோற்றத்தை தரும்.

ஆடை மற்றும் சரும நிறத்திற்கேற்ற..

கண்களின் கீழ்ப்பகுதியை மறக்காதீர்கள்..

கண்களின் மேல் இமைகளுக்கு மட்டும் மேக்கப் போட்டுவிட்டு, கீழ் இமைகளை அப்படியே விடுவது மேக்கப்பை முழுமையற்றதாகக் காட்டும். மேல் இமைக்கு பயன்படுத்திய அதே ஷேடை ஒரு சிறிய பிரஷ் மூலம் கீழ் இமைப்பகுதியிலும் லேசாக ஸ்மட்ஜ் செய்ய வேண்டும். இது கண்களுக்கு ஒரு ஆழமான அழகைத் தரும்.

கண்களின் வடிவத்திற்கேற்ப..

உங்களுக்கு சிறிய கண்களாக இருந்தால் நீங்கள் பளிச்சென்று இருக்கும் கலரைத் தவிர்த்து, உங்கள் கண்களுக்கு மேல் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஹைலைட்டர் பயன்படுத்த வேண்டும். பிறகு உங்க கண்கள் சிறியதாக தெரியாமல் அழகாக தெரியும்.

உங்கள் கண்கள் பெரியதாக இருந்தால் நீங்கள் எப்போதும் போல் ஐ ஷேடோவை பயன்படுத்திவிட்டு கண்ணின் நுனியில் லைட் ஷேட்ஸ் ஹைலைட்டரை பயன்படுத்த வேண்டும் அப்போ உங்கள் கண்கள் பெரியதாகவே இருந்தாலும் அவளவு அழகாக தெரியும்..

'ஹைலைட்டர்'..

என்ன தான் நாம் கண்களுக்கு ஐ ஷேடோஸ் பயன்படுத்தினாலும் அதை நமக்கு தூக்கி கொடுப்பதே ஹைலைட்டர் தான். நீங்கள் வெளியே எங்கேயாவது பார்ட்டி போன்ற இடங்களுக்கு செல்லும் போது உங்கள் நிறத்திற்கும், நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளுக்கேற்ப ஐ ஷேடோ பயன்படுத்திவிட்டு ஐ ஷேடோ பேலட்டில் இருக்கும் லைட் ஷிம்மர் நிறத்தை எடுத்து, இரு கண்களின் மூலையில் வைத்தால் உங்கள் கண்கள் அவ்வளவு அழகாக தெரியும்.