அழகுக் குறிப்புகள்

கரும்புள்ளிகள் மறைந்து முகம் தக தகவென ஜொலிக்க!

கரும்புள்ளிகள் மறைந்து முகம் தங்கம் போல ஜொலிக்க.. இந்த 3 பொருட்கள் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவருக்குமே முகத்துல இருக்குற பெரிய பிரச்சனை முகத்துல பரு வருவதுதான்.

அது அப்டியே கரும்புள்ளி ஆகிருது. இதுக்கு சூப்பரான டிப்ஸ் வேணுமா? இதுக்கு கடைகளில் விக்கிற ரசாயனக் கிரீம்களை பயன்படுத்தி பணத்தை வீணாக்காதீங்க.

அதுல என்ன என்ன கலந்துருப்பாங்கணும் தெரியாது. நம்ம வீட்டு சமையலறையில இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டே இதுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.

அற்புதமான இயற்கை ஃபேஸ் பேக்..

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அடியோடு நீக்கக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை ஃபேஸ் பேக் செய்யும் முறை..

தேவையான பொருட்கள்..

உருளைக்கிழங்கு - எலுமிச்சை சாறு - தேன்

பயன்படுத்தும் முறை..

முதலில் நல்லா குளிர்ந்த நீருல முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அப்புறம் சுத்தமான சாப்ட் துணில முகத்தை துடைக்க வேண்டும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த ஃபேஸ் பேக்கை சிறிய பஞ்சில் நனைத்து, முகம் முழுவதும் குறிப்பாக கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் நன்றாக அப்ளை செய்யவும்.

20 முதல் 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, லேசான மாய்ச்சுரைசர் தடவிக் கொள்ளலாம்.

இந்த பொருட்கள் எப்படி வேலை செய்யும் தெரியுமா?

உருளைக்கிழங்கு சாறு: உருளைக்கிழங்குல இயற்கையாவே 'பிளீச்சிங்' குணம் அதிகமா இருக்குங்க. இது முகத்துல இருக்குற கறைகள், பரு வந்த வடுக்கள், அப்புறம் அந்த கரும்புள்ளிகளை ரொம்ப வேகமா மங்க வச்சு, உங்க ஸ்கின்னை பழையபடி கலரா மாத்திடும்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சையில இருக்குற வைட்டமின் சி-யும் சிட்ரிக் அமிலமும் முகத்துல இருக்குற கிருமிகளை அடியோடு அழிச்சிடும். இதனால புதுசா பருக்கள் வராம தடுக்குறது மட்டும் இல்லாம, முகத்தையும் நல்லா பிரைட்டா காட்டும்.

தேன்: லெமன் ஜூஸ் போடுறதால முகம் சில சமயம் ட்ரை ஆக வாய்ப்பிருக்கு. அப்படி ஆகாம பாத்துக்குறது தான் நம்ம தேனோட வேலை! இது ஒரு செம்ம நேச்சுரல் மாய்ச்சுரைசர் என்பதால், உங்க சருமத்தை எப்பவும் சாஃப்ட்டா வச்சிருக்கும்.

இந்த சிம்பிள் ஃபேஸ் பேக்கை வாரத்துல 3 நாள் மட்டும் தொடர்ந்து ட்ரை பண்ணிப் பாருங்க. உங்க முகத்துல இருக்குற கரும்புள்ளிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு, முகம் தங்கம் மாதிரி ஜொலிக்கிறதை நீங்களே பாப்பீங்க.. அப்றோம் இந்த ஃபேஸ் பேக்க மிஸ் பண்ணவே மாட்டீங்க!