அழகுக் குறிப்புகள்

உங்களுக்கு பெரிய நெற்றியா இருப்பதால் எந்த ஹேர் கட் பண்ணனும்னு confuse இருக்கா?

கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்பிரேக்களைத் தவிர்த்து, கூந்தலுக்குத் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்களை வழங்குங்கள்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று "பெரிய நெற்றி". "நமக்கு நெற்றி இவ்வளவு பெருசா இருக்கே, எந்த ஹேர் கட் பண்ணினாலும் செட் ஆக மாட்டேங்குதே" என்று கண்ணாடி முன்னாடி நின்று பல மணி நேரம் யோசித்து குழம்புபவரா நீங்கள்? கவலையை விடுங்கள்! உங்களது பெரிய நெற்றியை உங்களது பலவீனமாக பார்க்காமல், அதை ஒரு தனித்துவமான அழகாக மாற்ற சில நவீன ஹேர் கட்கள் வந்துவிட்டன.

விஸ்பி ஃபிரிஞ்சஸ் ஹேர் கட்

பெரிய நெற்றி உள்ளவர்களுக்கு எப்போதும் ஃபேவரிட் சாய்ஸாக இருப்பது இந்த ஃபிரிஞ்சஸ் கட் தான். இதில் நெற்றியை முழுமையாக அடர்த்தியான முடியால் மூடாமல், லேசான மற்றும் மெல்லிய முடிகள் நெற்றியில் சிதறி விழுவது போல் வெட்டப்படும்.

இது பார்ப்பதற்கு மிகவும் மாடர்னாகவும், அதே சமயம் உங்களது நெற்றியின் அகலத்தை பாதியாகக் குறைத்தும் காட்டும். குறிப்பாக வட்ட வடிவ முகம் உள்ளவர்களுக்கு இது ஒரு இளமையான தோற்றத்தைத் தரும்.

கர்ட்டன் பேங்ஸ் ஹேர் கட்

கடந்த சில வருடங்களாகவே உலகளவில் மிகப்பெரிய டிரெண்டில் இருக்கும் ஹேர் கட் இது. ஜன்னல் திரைகளை இரண்டு பக்கமும் ஒதுக்கி வைப்பது போல, உங்களது முன்பக்க முடிகள் நடுவில் வகிடு எடுக்கப்பட்டு இரண்டு பக்கவாட்டிலும் அழகாக விழும்.

இந்த கட் செய்யும் போது, முடிகள் நெற்றியின் ஓரங்களை மறைத்து கன்ன எலும்புகளை எடுப்பாகக் காட்டும். நேர் முடி மற்றும் அலை அலையான முடி உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.

கிளாசிக் ஃபிரண்ட் பேங்ஸ்

உங்களது பெரிய நெற்றியை வெளியில் யாருக்கும் தெரியாதவாறு முழுமையாக மறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்குப் பொருத்தமான ஒரே ஹேர் கட் "ஃபிரண்ட் பேங்ஸ்" மட்டும்தான்.

இதில் புருவங்கள் வரை நேராக முடிகள் வெட்டப்பட்டு நெற்றி முழுவதையும் கவர் செய்துவிடும். இது உங்களது கண்களை இன்னும் அழகாகவும், உங்களது ஒட்டுமொத்த முக அமைப்பை சிறியதாகவும் மாற்றிக் காட்டும் அற்புதம் செய்யக்கூடியது.

டெக்ஸ்சர்டு லேயர்ட் கட்

தலைமுடிக்கு நல்ல வால்யூம் கொடுத்து, அதே சமயம் நெற்றியின் மீதான கவனத்தைத் திருப்ப இந்த லேயர்ட் கட் உதவும். இதில் முன்பக்க முடிகள் கன்னம் அல்லது தாடைப் பகுதியில் இருந்து லேயர் லேயராக வெட்டப்படும்.

இந்த முடிகள் முகத்தைச் சுற்றி ஃபிரேம் போல விழுவதால், பார்ப்பவர்களின் பார்வை உங்களது நெற்றிக்குச் செல்லாமல் உங்களது ஹேர் ஸ்டைலின் அழகின் மீது மட்டுமே இருக்கும். நடுத்தர மற்றும் நீளமான முடி கொண்டவர்களுக்கு இது அட்டகாசமாகப் பொருந்தும்.

அசிமெட்ரிகல் பாப் கட்

குட்டையான முடி வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களுக்கான அல்டிமேட் ஹேர் கட் இது. இதில் தலைமுடியின் ஒரு பக்கம் நீளமாகவும், மறுபக்கம் சற்று குட்டையாகவும் சமமில்லாமல் வெட்டப்படும்.

இந்த ஸ்டைலில் நீளமாக இருக்கும் முன்பக்க முடிகள் நெற்றியை ஒட்டி சாய்வாக விழுவதால், பெரிய நெற்றி மிகவும் ஸ்டைலாக மறைக்கப்படும். ஆபீஸ் செல்லும் பெண்களுக்கு இது ஒரு போல்டான மற்றும் ப்ரொஃபெஷனல் லுக்கைக் கொடுக்கும்.

ஷாக் ஹேர் கட்

70-களின் ஸ்டைலாக இருந்தாலும், இப்போது மீண்டும் இளசுகளின் மத்தியில் செம ஹிட்டாக இருக்கும் கட் இது. இதில் தலைமுடி முழுவதும் பல அடுக்குகளாக வெட்டப்பட்டு, முன்பக்கம் மெல்லிய பேங்ஸ் முடிகள் விடப்படும்.

இந்த ஹேர் கட் பார்ப்பதற்கு சற்று மெஸ்ஸியாக இருந்தாலும், பெரிய நெற்றியை மறைப்பதில் மிகக் கில்லாடி. சுருட்டை முடி உள்ளவர்கள் தாராளமாக இந்த ஹேர் கட்டை தேர்வு செய்யலாம்.

பியூட்டி அலர்ட்

உங்களது ஹேர் கட் எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்றால், முடி உதிர்வதைத் தடுத்து முடியை அடர்த்தியாகப் பராமரிப்பது முக்கியம்.

கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்பிரேக்களைத் தவிர்த்து, கூந்தலுக்குத் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்களை வழங்குங்கள்.