பண்டிகை நெருங்கிவிட்டாலே புத்தாடை வாங்குவதுதான் நம் அனைவரின் முதல் வேலையாக இருக்கும். ஆனால், கடைகளுக்குச் செல்லும்போது அல்லது ஆன்லைனில் தேடும்போது எந்த வகையான ஆடையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படுவது இயற்கை. உங்களை தனித்துவமாகவும், அழகாகவும் காட்டக்கூடிய சிறந்த ஆடைத் தேர்வுகள் இதோ..
பண்டிகைக்கு எப்போதுமே முதலிடம் பிடிப்பது நமது பாரம்பரிய பட்டுப்புடவைகள்தான். காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டு அல்லது சாஃப்ட் சில்க் புடவைகள் பண்டிகை காலத்திற்கு மிக நேர்த்தியான தோற்றத்தைத் தரும்.
இந்த ஆண்டு மெரூன், ராணி பிங்க் மற்றும் மஸ்டர்ட் மஞ்சள் போன்ற பிரகாசமான நிறங்கள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
பெண்களுக்கு ராயல் மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொடுப்பதில் பனாரஸ் லெஹங்காவிற்கு நிகர் எதுவுமில்லை.
கனமான பார்டர் மற்றும் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட இந்த லெஹங்காக்கள் தீபாவளி இரவு நேர கொண்டாட்டங்களுக்கும், விளக்குகள் ஏற்றி புகைப்படம் எடுப்பதற்கும் மிகப்பொருத்தமாக இருக்கும்.
அளவுக்கு அதிகமான எடையில்லாமல், அதேசமயம் கிராண்ட் லுக் தரக்கூடிய ஆடைகளை விரும்புபவர்களின் முதல் தேர்வு அனார்கலி சூட்.
தரை வரை நீளும் இந்த ஆடைகள், நடப்பதற்கும் திருவிழா வேலைகளைச் செய்வதற்கும் மிகவும் சௌகரியமாக இருக்கும். ஜார்ஜெட் அல்லது மஸ்லின் துணிகளில் வரும் அனார்கலிகள் இந்த சீசனில் டிரெண்டாக உள்ளன.
பாரம்பரிய உடைகளில் நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களுக்கு இந்த இந்தோ-வெஸ்டர்ன் முறை ஆடை மிகச் சிறந்த தேர்வாகும்.
ஒரு எம்பிராய்டரி செய்யப்பட்ட கிராப் டாப் மற்றும் அதற்கேற்றவாறு ப்ளீட்ஸ் வைக்கப்பட்ட லாங் ஸ்கர்ட் அணிவது உங்களை மிகவும் மாடர்னாகவும், தனித்துவமாகவும் காட்டும்.
பண்டிகை நாளில் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும், அதே சமயம் அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலேஸோ பேண்ட் மற்றும் லாங் குர்தா ஜோடியைத் தேர்ந்தெடுக்கலாம்.
காட்டன் சில்க் அல்லது ஜாம்தானி வேலைப்பாடுகள் கொண்ட குர்தாக்கள் பண்டிகை உணர்வைக் கெடுக்காமல் சௌகரியத்தை வழங்கும்.
தற்போது இளசுகளின் மத்தியில் மிக வேகமாக டிரெண்டாகி வரும் ஆடை ஷராரா சூட் ஆகும்.
அடுக்கு அடுக்கான ஃப்ரில்ஸ் கொண்ட பேண்ட் மற்றும் ஷார்ட் குர்தாவுடன் வரும் இந்த ஆடை, பண்டிகைக்கு ஒரு நார்த் இண்டியன் ஸ்டைல் மற்றும் பாலிவுட் லுக்கைக் கொடுக்கும்.