ஆரோக்கியம்

கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்

சில பெண்களுக்கு கழுத்து, கழுத்தின் பின்பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இதனை போக்கும் இயற்கை வழிமுறைகளை இன்று தெரிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

அதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கழுத்தில் கருமை ஏற்படும். இதனை போக்குவதற்கு எளிய மற்றும் உண்மையில் பயனளிக்கக் கூடிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.