ஆரோக்கியம்

சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப்

கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று காலையில் குடிக்க சத்தான முருங்கைகீரை சூப் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

முருங்கை இலை - 2 கப்

கேரட் துருவல் - அரைகப்

தேங்காய் துருவல் - அரை கப்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி துண்டுகள் - 3

பூண்டு - 1

கொத்தமல்லி இலை - ஒரு பிடி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - சிறிதளவு

செய்முறை :

முருங்கை இலையை நார் இல்லாத அளவுக்கு சுத்தமாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

கேரட் துருவல், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளை ஒன்றாக்கி அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும்போது தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள்.

அடுத்து அதில் வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு ஓடவிடுங்கள்.

அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள்.

அத்துடன் மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.