ஆரோக்கியம்

வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

கோடைக்காலத்தில் குடிக்க இதமானது லஸ்ஸி. இன்று புதினா சேர்த்து குளுகுளு லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தயிர் - ஒரு கப்,
பால் - கால் கப்,
புதினா இலைகள் - கால் கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
கருப்பு உப்பு - சிறிதளவு,
சர்க்கரை - 3 டீஸ்பூன்,
ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை :

புதினாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

மிக்சியில் புதினா இலையை போட்டு நன்றாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து மிக்சியில் வடிகட்டிய புதினா சாறு, தயிர், பால், சீரகம், கருப்பு உப்பு, சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வரும் வரை அடித்தெடுக்கவும். இதனை டம்பளரில் ஊற்றி பருகலாம்.

சூப்பரான புதினா லஸ்ஸி ரெடி.