ஆரோக்கியம்

மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப்

வயிற்று புண்ணால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் மணத்தக்காளி கீரையை சேர்த்து கொள்வது நல்ல பலனை தரும். இன்று மணத்தக்காளி கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

மணத்தக்காளி கீரை - அரை கட்டு,
சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - 3 பல்,
தேங்காய்ப்பால் - அரை கப்,
உப்பு - சுவைக்கேற்ப,
மிளகுத்தூள் - சிறிதளவு,

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் கீரையையும் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.

அடுத்து அதில் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்குங்கள்.  

குக்கர் விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மிளகுத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.

மணத்தக்காளி கீரை - தேங்காய் பால் சூப் ரெடி.

வயிற்றுப்புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சூப்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.