வஞ்சிரம் மீன் - அரை கிலோ அல்லது துண்டு மீன்
சின்னவெங்காயம் - 3
தக்காளி - 2
சின்னவெங்கா மற்றும் தக்காளி விழுது - ஒரு கப் (ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்)
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வறுத்த வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
முதலாவது (கெட்டியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
இரண்டாவது (தண்ணியான) தேங்காய்ப்பால் - ஒரு கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
* கொத்தமல்லி, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்துவைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காய விழுதை இதனுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.
* அடுத்து அதில் இரண்டாவது தேங்காய்ப்பால், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* மிளகாய்த்தூள் வாடை நீங்கியவுடன் மீனைச் சேர்த்து, மீன் வெந்தவுடன் முதல் தேங்காய்ப்பால் மற்றும் வெந்தயத்தூளைச் சேர்த்து, கொதி வருவதற்குள் அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
* மணக்கும் மலபார் மீன் குழம்பு ரெடி.