ஆரோக்கியம்

இட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து

கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை. இன்று இந்த கொஸ்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

பாசிப் பருப்பு - 1 கப்
பச்சைப் பயறு - 2 கரண்டி
நிலக்கடலை - 2 கரண்டி
கொள்ளு - 2 கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
பச்சை கத்தரிக்காய் - 2
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
சீரகம் - 1/4 தேக்கரண்டி

சாம்பார் பொடி, உப்பு - தேவையான அளவு

தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.

வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து  கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.

இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.