ஆரோக்கியம்

கொழுப்பை கரைக்கும் கொள்ளு புட்டு

உடல்எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கொள்ளுவை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இன்று கொள்ளு புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

கொள்ளு - அரை கப்

தேங்காய்த் துருவல் - கால் கப்

பச்சை மிளகாய் - 1 

வெங்காயம் - 1

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு,

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை : 

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கொள்ளுவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் புட்டு மாவு போன்று அரைத்துக்கொள்ள வேண்டும். 

இட்லி தட்டில் மாவை கொட்டி வேகவைத்து உதிரியாக்கிக்கொள்ள வேண்டும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கொள்ளு மாவில் ஊற்றி கிளறி, தேங்காய் துருவல் கலந்து சுவைக்கலாம்.

சூப்பரான கொள்ளு புட்டு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.