செய்முறை :
* நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அடுத்து நண்டு சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நண்டுடன் பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, சில நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
* நண்டு ஓரளவு வெந்த பின்பு அதில் புளிக் கரைசல் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான காரைக்குடி நண்டு மசாலா ரெடி.