ஆரோக்யம்

குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கிறீர்களா? அப்ப இத படிங்க

குழந்தைகள் பழவகைகளை சாப்பிடுவது அவர்களின் உடல் நலனுக்கு உகந்தது. ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக் கூடாது.

ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுக்கக்கூடாது. காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுக்கலாம். குறிப்பாக காலை 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் பருக வைக்கலாம். ஒரே மாதிரியான பழ ஜூஸை தினமும் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

சிலவகை பழங்கள் குழந்தைகளுக்கு பிடிக்காது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி அருந்தவைக்கக்கூடாது. அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் அவர்களுக்கு பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்துக் கொடுக்கலாம். இரவு நேரங்களில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் தவிர்த்திட வேண்டும். குளிர்காலத்தில் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது.