ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த நாவல்பழ ஜூஸ்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது நாவல் பழம். இன்று நாவல்பழத்தை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

நாவல்பழம் (நீள் வடிவம்) - 10,
பேரீச்சம்பழம் - 10,
வெல்லத்தூள் - கால் கப்,
எலுமிச்சம்பழம் (விருப்பப்பட்டால்) - 1,
உப்பு - சிறிதளவு.

செய்முறை :

நாவல்பழத்தை இரண்டாகக் கீறி, விதை நீக்கவும்.

பேரீச்சம்பழங்களையும் விதையை எடுக்கவும்.

நாவல் பழம், பேரீச்சம்பழம் இரண்டையும் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வெல்லத்தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டிக்கொள்ளவும்.

வெல்லத்தண்ணீர் ஆறியதும், நாவல்பழ விழுதைச் சேர்க்கவும்.

சிட்டிகை உப்புப் போட்டு, அருந்தலாம்.

விரும்பினால், எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய புதினாவை மேலே தூவலாம்.

மணமும் சுவையும் தூக்கலாக இருக்கும்.