ஆரோக்கியம்

புத்துணர்ச்சி தரும் மாம்பழ - பேரீச்சம்பழம் ஸ்மூத்தி

ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் தினமும் பழங்கள், அல்லது பழச்சாறு குடிப்பது நல்லது. இன்று மாம்பழ - பேரீச்சம்பழம் ஸ்மூத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

மாம்பழம் - 1
பேரீச்சம் பழம் - 10
தேன் - 1 ஸ்பூன்
பால் - 1 கப்
பட்டை தூள் - அரை ஸ்பூன்
ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

செய்முறை :

* மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* மிக்சியில் பேரீச்சம் பழம் சிறிது பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அடுத்து அதில் மாம்பழ துண்டுகள், பால், தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் பட்டை தூள் தூவி பருகவும்..

* சத்தான சுவையான மாம்பழ - பேரீச்சம்பழம் ஸ்மூத்தி ரெடி.