ஆரோக்கியம்

தயிர் சாதத்திற்கு அருமையான கோவைக்காய் வறுவல்

கோவைக்காய் வறுவல் தயிர் சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

கோவைக்காய் - அரை கிலோ,
பாட்டி மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
பாட்டி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
பாட்டி சீரகக்தூள் - ஒரு டீஸ்பூன்,
பாட்டி தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

கோவைக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். (வட்ட வடிவிலும் வெட்டிக்கொள்ளலாம்)

நறுக்கிய கோவைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பாட்டி மஞ்சள் தூள், பாட்டி மிளகாய்த்தூள்,பாட்டி சீரகத்தூள், பாட்டி தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும் பிசிறி வைத்துள்ள கோவைக்காயை போட்டு 10 நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிபோட்டு வேக விடவும். எண்ணெயிலேயே வதக்க வேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

அடுத்து தீயை மிதமான சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

அருமையான கோவைக்காய் வறுவல் ரெடி.