ஆரோக்கியம்

சத்து நிறைந்த காலை உணவு கீரைப் பொங்கல்

கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு நாம் செய்யும் உணவுகளில் கீரையை சேர்த்து செய்து அவர்களுக்கு கொடுக்கலாம். இன்று பொங்கலில் கீரை சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
அரிசி - 250 கிராம்,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி  - சிறிய துண்டு
வறுத்த முந்திரி - 10,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

* அரிசியையும், பாசிப்பருப்பையும் லேசாக சூடுவரும் வரை வறுத்து கொள்ளவும்.

* வறுத்த அரிசி - பருப்புடன் ஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் நன்றாக மசித்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு சூடானதும் இஞ்சியை போட்டு வதக்கிய பின்னர் நறுக்கிய கீரை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகு - சீரகப்பொடி சேர்த்து வதக்கவும்.

* கீரை நன்றாக வெந்ததும் வேக வைத்த சாதத்துடன் தேவையான உப்பு, வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்..

* சூப்பரான கீரைப் பொங்கல் தயார்.

குறிப்பு: புளிப்புத்தன்மை இல்லாத எந்த கீரையிலும் பொங்கல் தயாரிக்கலாம்.