முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
தேங்காய் துருவல் - சிறிதளவு,
பச்சை மிளகாய் - ஒன்று,
புளிக்காத தயிர் - ஒரு கப்,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்சியில் தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முளைக்கீரையை போட்டு வேகவிடவும்.
* கீரை வெந்ததும், உப்பு, தேங்காய் விழுது, தயிர் சேர்த்துக் கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்துக் கலக்கவும்.
* இப்போது முளைக்கீரை தயிர்க்கூட்டு ரெடி.