ஆரோக்யம்

இட்லி உப்புமா செய்வது எப்படி

எளிய முறையில் இட்லி உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள் :

இட்லி - 4

உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - 1 சிறிய துண்டு

கறிவேப்பிலை - சிறிது   

செய்முறை :

* இட்லிகளை உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், மிளகாய், இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து 1 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.  

* உப்பு தேவைப்பட்டால் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.

* சுவையான இட்லி உப்புமா ரெடி.

* காலையில் செய்த இட்லி மீந்து விட்டால் மாலையில் இப்படி செய்து அசத்தலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.