சமையல்

கோதுமை வரகு கேழ்வரகு தோசை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 200 கிராம்

கோதுமை - 100 கிராம்

ராகி - 100 கிராம்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

வெந்தயம் - 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வரகு அரிசி, கேழ்வரகு, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைக்கவும்.

எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 3 முதல் 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நல்லெண்ணெய் விட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

இப்போது சத்தான சுவையான கோதுமை வரகு கேழ்வரகு தோசை ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.