சமையல்

பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

மென்மையான உளுந்து போண்டா வேண்டுமா? வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மாவு அரைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு காரக்கறி செய்வதாக இருந்தால் அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித்தயிர் ஊற்றி வதக்கவும். கூடுதல் சுவையுடன் இருக்கும்.

* பொரி உருண்டை செய்ய அவல் பொரியை வெல்லப்பாகில் போடும் முன்பாக வெறும் வாணலியில் லேசாக சூடு செய்து கொள்ளவும். பின்பு உருண்டை பிடித்தால் கரகர பொரி உருண்டை தயார்.

* புதினா அதிகமாக கிடைக்கும் காலத்தில் வாங்கி உலர் வைத்துக்கொள்ள வேண்டும். மசாலா சேர்த்து உணவு தயாரிக்கும்போது இந்த உலர் புதினாவை சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.

* பொரித்த அப்பளம் நமுத்து போகாமல் இருக்க வேண்டுமா? சூடு ஆறிய பின் அப்பளத்தை ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்கள் என்றாலும் மொறு மொறுப்பு குறையாமல் இருக்கும்.

* பக்கோடா செய்யும்போது மொறு மொறுப்பாக இருக்க வேண்டுமா? மாவை கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பு கலந்த தயிரையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

* முருங்கை இலையை நெய்யில் பொரித்தெடுத்து கையால் நொறுக்கி மாவுடன் கலந்து தோசை வார்க்கவும். மணமான, சுவையான தோசையை சுவைக்கலாம்.

* சப்பாத்தி, பூரி ஆகியவற்றை இரவில் சாப்பிடுகிறீர்களா? ஒரு கரண்டி தயிரில் 3 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சாப்பிடுங்கள். எளிதில் ஜீரணமாகும். நெஞ்சு எரிச்சலும் இருக்காது.

* முள்ளங்கியை நன்கு சீவி, கோதுமை மாவுடன் கலந்து மிளகாய், உப்பு சேர்த்து அரைத்து நன்றாக பிசைந்து சப்பாத்தி செய்து சாப்பிட்டால் சத்தும், சுவையும் கூடும்.

* பஜ்ஜி போட காய்கறி எதுவும் இல்லாவிட்டால் பரவாயில்லை. சப்பாத்தி மாவை நமக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்து சாப்பிடலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.

* மென்மையான உளுந்து போண்டா வேண்டுமா? வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி சேர்த்து மாவு அரைக்க வேண்டும்.

* கொதிக்கும் பாலில் நறுக்கிய பேரீச்சம் பழத்துண்டுகளையும் சேர்த்து வெல்லச்சீடை செய்யலாம். சீடை மிருதுவாகவும் மாறுபட்ட சுவையுடனும் இருக்கும்.

* சாதம் வடித்த கஞ்சியில் வைட்டமின் பி சத்து இருக்கிறது. இக்கஞ்சியில் சிறிது மோரும், உப்பும் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல்நலம் நன்றாக இருக்கும்.

* உளுந்து மாவிலேயே சீடை போல சின்ன சின்னதாக எண்ணெய்யில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு சாப்பிட்டால் புது சுவையான குளோப்ஜாமுனாக இருக்கும்.

* பூரணத்திற்கு பதிலாக ஒரு ஸ்பூன் சுண்டலை கொழுக்கட்டை மாவில் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வித்தியாசமான சுவையை ருசிக்கலாம்.