சமையல்

பப்பாளி தேங்காய்ப்பால் மில்க் ஷேக்

பப்பாளி பழத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மில்க் ஷேக் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

பழுத்த பப்பாளிப்பழம் - 1/2

தேங்காய்ப் பால் - 1 கப்

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - 1/4 கப்

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை :

பப்பாளி பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பப்பாளிப்பழத்துடன் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, தேங்காய்ப் பால் ஊற்றி, ஏலக்காய் தூள் சேர்த்து லேசாக மிக்ஸியில் அடித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும்.

நன்கு குளிர்ந்தவுடன் பரிமாறவும்.

சூப்பரான பப்பாளிப்பழ மில்க் ஷேக் ரெடி.