சமையல்

இரும்பு சத்து நிறைந்த ராகி சேமியா புட்டு

குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :

தேங்காயை துருவிக்கொள்ளவும்.

கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.

பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.

வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.

சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.

SCROLL FOR NEXT