சமையல்

15 நிமிடத்தில் சத்தான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு செய்யலாம்...

இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.சத்தானது சுவையானது இந்த ஸ்நாக்ஸ்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் - 1/4 கிலோ

சாக்லேட் - 100 கிராம் அல்லது சாக்லேட் சிறப்பு - 100 மில்லி

தேங்காய் - 1/2 மூடி

செய்முறை :

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

தேங்காயை துருவி கொள்ளவும்.

சாக்லேட்டை உருக்கி கொள்ளவும்.

உருக்கிய சாக்லேட்டில் பேரீச்சம்பழ விழுது, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இப்போது சத்தான சுவையான சாக்லேட் பேரீச்சம் பழ லட்டு ரெடி.