கொண்டைக்கடலை கேரட் சாலட் 
சமையல்

கொண்டைக்கடலை கேரட் சாலட்

கொண்டைக்கடலையில் கரையும் நார்ச்சத்துக்கள், அதிகப்படியான புரோட்டீன், இரும்புச்சத்து போன்றவை இருக்கிறது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை - 1 கப்

கேரட் - 3

கொத்தமல்லி - சிறிதளவு

வெங்காயம் - 1

தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

ப.மிளகாய் - 1

மிளகு தூள் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

இந்துப்பு - சிறிதளவு

செய்முறை

கொண்டைக்கடலையை சுத்தம் செய்து வேக வைத்து கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி.

SCROLL FOR NEXT