பொது மருத்துவம்

பலாப்பழம் ஏன் சாப்பிட வேண்டும்?

பலாப்பழத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது.

கோடை கால சீசன் பழங்களுள் தனித்துவமான இடம் பலாப்பழத்துக்கு உண்டு. இது வெப்பமண்டலப் பழம் மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். ஏனெனில் வியக்கத்தக்க வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. அந்த விவரங்களை காண்போம்...

1. செரிமான ஆரோக்கியம்

அதிக நார்ச்சத்து இருப்பதால், பலாப்பழம் மலச்சிக்கலைத் தடுக்கவும். சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும். குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும். செரிமானம் சீராக நடைபெறவும் வழிவகை செய்யும். நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வையும் தரும்.

2. நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ள இது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது.

3. இதய நலன்

இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவிடும். இதயத்திற்கு அழுத்தம் ஏற்படுவதை குறைப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்க துணை புரியும்.

4. ரத்த சர்க்கரை

பலாப்பழத்தில் உள்ள இயற்கையான நார்ச்சத்துக்கள் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. மிதமாக உண்ணும்போது, ரத்த சர்க்கரை வேகமாக உயர்வதை தடுக்க உதவும்.

5. இறைச்சிக்கு மாற்று

இளம் பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள், சைவம் மற்றும் பன்றி அல்லது கோழி இறைச்சிக்கு மாற்றாகவும் அமைகிறது.

6. ஆன்டி ஆக்சிடென்டுகள்

பலாப்பழத்தில் கரோட்டினாய்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை செல்களை ஆன்டி ஆக்சிடென்ட் அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதுடன், முதுமையை தடுக்கவும் உதவக்கூடும்.

7. தாதுக்கள்

பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவற்றையும் பலாப்பழம் கொண்டுள்ளது. இவை இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்.