பொது மருத்துவம்

உடல் உறுப்புகள் பாதிப்பை உணர்த்தும் அறிகுறிகள்...

அதிக இனிப்பு சாப்பிடும் ஆசை வெளிப்படுதல், திடீர் சோர்வு, அடிக்கடி தாகம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

கல்லீரல்

கல்லீரல் நோய்கள் ஆரம்பத்தில் அறிகுறி இல்லாமல் இருக்கலாம். கடுமையான சேதம் ஏற்பட்ட பிறகே வலி உணரப்படலாம்.

ஆரம்ப அறிகுறிகள்: சோர்வு, மூளை மந்தம், சரும அரிப்பு

இதயம்

தொடர்ந்து சோர்வு, லேசான மார்பு அழுத்தம், மூச்சுத்திணறல், மயக்கம் போன்றவை பெரிய அளவிலான இதய பிரச்சனைகளுக்கு முன்பு தோன்றலாம்.

சிறுநீரகங்கள்

பல ஆண்டுகள் அறிகுறி இல்லாமல் இருக்கும். கண் வீக்கம், குதிகால் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழித்தல் கண்களை சுற்றி கருவளையம் தோன்றுதல் ஆரம்ப அறிகுறிகள்.

கணையம்

ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் தென்படும். அதிக இனிப்பு சாப்பிடும் ஆசை வெளிப்படுதல், திடீர் சோர்வு, அடிக்கடி தாகம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

தைராய்டு

உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி விடும். ஆரம்ப அறிகுறிகள்: முடி உதிர்வு, மனநிலை மாற்றம், உடல் குளிர்ச்சியாக இருப்பதாக உணர்வது, காரணமின்றி உடல் எடை மாறுதல்.

பித்தப்பை

கற்கள் உருவாகும் வரை அமைதியாக இருக்கும். கொழுப்பு வகை உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், வாந்தி உணர்வு அல்லது அசவுகரியம் ஏற்படலாம்.

நுரையீரல்

நுரையீரல் பாகங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளான பிறகே தெரியலாம். சக்தி குறைவு, மூச்சுத்திணறல், அல்லது மார்பு இறுக்கம் ஆரம்ப அறிகுறிகள்.

பெருங்குடல்

உள் அழற்சி மறைந்து இருக்கும். வயிறு வீக்கம், ஒழுங்கற்ற மலச்சிக்கல் தோன்றும். மீண்டும், மீண்டும் தோல் பிரச்சனை தோன்றும்.

அட்ரினல் சுரப்பிகள்

நீண்டகால மன அழுத்தத்தால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு இதன் செயல்பாட்டை சோர்வடையச் செய்யும். சோர்வாக இருந்தும் தூக்கம் வராமல் தவித்தல், காபி பருகும் பழக்கத்தை தவிர்க்க முடியாமை, மதிய நேரத்தில் சோர்வு ஆகியவை பொதுவானவை.

மூளை

மறதி, எரிச்சல், சிந்தனை மந்தம், கவனக்குறைவு ஆகிய அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

வயிறு

வயிறு வீக்கம், அமிலம் மேலே வருதல், ஊட்டச்சத்து குறைபாடு, குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு தோன்றுவது ஆரம்ப அறிகுறிகளாகும்.

ரத்த நாளங்கள்

இது அமைதியாக சேதம் அடையும். கைகள், கால்கள் குளிர்ந்து விடும், மயக்க, உணர்வு இழப்பு, உடற்பயிற்சி செய்ய முடியாமை போன்றவை முக்கிய அறிகுறிகள்.

ஏதேனும் ஒருசில அறிகுறிகள் வெளிப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது.