பொது மருத்துவம்

உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஓய்வு தேவை

எதிர்மறை சிந்தனையும் மூளையை பலவீனமாக்கி மனதின் ஆற்றலை குறைத்துவிடும்.

உடல் நலத்தை பேணுவதுபோலவே மூளையின் நலனை காக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு சில எளிய பழக்கவழக்கங்கள் மூளைக்கு நன்மை பயக்கும்.

புத்துணர்ச்சியுடனும், கவன சிதறல் இன்றியும் செயல்பட காலையில் சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுங்கள்.

ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

செல்போன், டி.வி. உள்பட டிஜிட்டல் திரையில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, மூளைக்கு போதிய ஓய்வை கொடுங்கள்.

மன அழுத்தத்தை இயல்பாகவே குறைக்க, இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள்.

மனத்தெளிவிற்காக தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சி செய்யுங்கள்.

நன்றாக உறங்குங்கள். உடலுக்கு பயிற்சி கொடுங்கள்.

அதிகப்படியான மன அழுத்தத்திற்கு ஆளாகுதல், இரவு நேரங்களில் சமூக ஊடகங்களில் உலாவுதல், துரித உணவுகள் அதிகம் சாப்பிடுதல் போன்றவை மூளைக்கு ஏற்புடையதல்ல. எதிர்மறை சிந்தனையும் மூளையை பலவீனமாக்கி மனதின் ஆற்றலை குறைத்துவிடும்.

ஏதேனும் நெருக்கடியான சூழலை உணர்ந்தால் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து ஆழ்ந்து சுவாசியுங்கள். மனம் உங்களுக்கு நன்றி சொல்லும்.