பொது மருத்துவம்

இயற்கை பானம்... இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!

இளநீருடன் மஞ்சள், சந்தனம் கலந்து முகத்தில் போடுவதால் முகம் பொலிவாக தோற்றமளிக்கும்.

பழங்களைவிட இளநீரில் அதிக சத்துக்கள் உள்ளன. அவசர சிகிச்சையில் ஒருவருக்கு செலுத்தப்படும் குளுக்கோஸ் திரவத்தை விட அதிகமான சத்துக்கள் இளநீரில் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தென்னை மரத்தின் வேர்களானது மண்ணில் இருந்து தண்ணீரையும் ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சி, சைலம் மற்றும் புளோயம் என்ற நரம்புகள் வழியாக பூக்கள் மற்றும் இளம் காய்களுக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்படும் திரவத்தில் இயற்கை சர்க்கரை, எலக்ட்ரோலைட்டுகள் என்ற தாது உப்புக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பி உள்ளன. இவை ஒன்றிணைந்து இளநீராக மாறுகிறது.

பொதுவாக, இளநீர் உருவாகும் தொடக்க நிலையில், குரும்பை என்ற காய் பச்சை தோலுடன் மென்மையாக இருக்கும். இது மேலும் வளரும்போது உள்புறத்தில் நீர் குறைந்து, வெள்ளை கூழ் போன்ற தேங்காய் உருவாகும். இந்த செயல்முறை அதிகரிக்கும்போது, அது எந்த பருவத்தில் வெட்டி எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து அது இளநீர் அல்லது தேங்காய் என்று பெயர் பெறுகிறது.

* கோடையில், உடலானது ஆற்றலை இழக்காமல் இருக்க இளநீர், ஒரு இயற்கை பானமாகும்.

* இளநீரில் நிறைய எலக்ட்ரோலைட்கள் உள்ளதால், உடல் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்க உதவும். இளநீர் வெயிலில் களைப்பை குறைக்கும். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் சிறுநீரகச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. இளநீர் குடிப்பதால் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

* இளநீருடன் மஞ்சள், சந்தனம் கலந்து முகத்தில் போடுவதால் முகம் பொலிவாக தோற்றமளிக்கும்.

* இளநீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

* இளநீரில் கலோரி குறைவாகவும், கொழுப்பு இல்லாததாலும், உடல் எடையை குறைக்க உதவும்.

* இளநீர் குடிப்பதால் செரிமானம் சீராகும், அமிலத்தன்மை குறையும்.

* இளநீர் சிறுநீரை சீராக வெளியேற்ற உதவுகிறது.