சில பானங்களை வெறும் வயிற்றில் குடித்தாலும் சிறந்த நன்மைகளைத் தரும். அவை பற்றி...
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து பருகுவது, நச்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சீரகத் தண்ணீரானது, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, வயிற்று உப்புசத்தைக் குறைக்கிறது.
ரத்த சர்க்கரை அளவைச் சமநிலையில் வைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் வெந்தய நீர் உதவுகிறது.
அவ்வப்போது கிரீன் டீ பருகுவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
பாதாம் பருப்பு சாப்பிடுவதும், பாதாம் ஊறவைத்த நீரை குடிப்பதும் மூளை ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆற்றலை அளிக்கும்.