பொது மருத்துவம்

வேகமாக சாப்பிடுபவரா நீங்கள்?- அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க!

ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்காதீர்கள். உணவை மென்று விழுங்கும் வரை கைக்கு ஓய்வு கொடுங்கள்.

காலையில் வேலைக்கு செல்லும் பலரும் வேகமாக சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள். அது இட்லியாக இருந்தால் ஒரு நிமிடத்திற்குள் நான்கு, ஐந்து இட்லிகளை சர்வ சாதாரணமாக சாப்பிடுபவர்களும் உண்டு. அப்படி வேகமாக சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லதல்ல. வழக்கத்தை விட கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

ஏனெனில் அவசரமாக, வேகமாக சாப்பிடும் போது செரிமானமாகுவதற்கு போதுமான நேரம் உடலுக்கு கிடைப்பதில்லை. அதன் வெளிப்பாடாக வயிறு உப்புசம், அஜீரணம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். உடலுக்கும் போதிய சக்தி கிடைக்காது.

சாப்பிட தொடங்கும் முன்பு சில எளிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதுமானது.

சாப்பிடும் முன்பு நிதானமாக அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.

கையில் உணவை குறைவாக எடுங்கள். அதாவது வாய் நிறைய சாப்பிடுவதற்கு பதிலாக சிறிதளவு சாப்பிடுங்கள்.

உணவை விழுங்குவதற்கு முன்பு நன்றாக மெல்லுங்கள்.

ஒருமுறை வாய்க்குள் உணவை வைத்ததும் உடனே கையில் உணவை எடுக்காதீர்கள். உணவை மென்று விழுங்கும் வரை கைக்கு ஓய்வு கொடுங்கள்.

நீங்கள் சாப்பிட்ட உணவால் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ள மூளைக்கு போதிய நேரம் கொடுங்கள்.

அவசரமாக சாப்பிடுவதையும், உணவை மெல்லும்போது பேசுவதையும், சாப்பிடும் நேரத்தில் கைபேசியை பார்ப்பதையும் தவிருங்கள்.

உங்கள் உடல் இயந்திரம் அல்ல. அதை கவனமாக கையாளுங்கள்.