ஆரோக்கியம்

சத்தான சுவையான வெந்தயக்கீரை சாதம்

வெந்தயக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெந்தயக்கீரையை வைத்து சத்தான சுவையான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

பிரியாணி அரிசி - 250 கிராம்,
வெந்தயக்கீரை - 2 கட்டு (கழுவி, பொடியாக நறுக்கவும்),
இஞ்சி - ஒரு துண்டு,
பூண்டு - 10 பல்,
பச்சை மிளகாய் - 3,
தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
புதினா - அரை கைப்பிடி அளவு,
கொத்தமல்லி - அரை கைப்பிடி அளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 5,
தேங்காய்ப் பால் - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று,
தயிர் - 3 டீஸ்பூன்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

புதினா, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தனியாத்தூள், புதினா, கொத்தமல்லி, மஞ்சள்தூள், சின்ன வெங்காயம் ஆகியவற்றை நசுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

அடுத்து நசுக்கி வைத்துள்ளவற்றையும் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.

இதனுடன் தயிர், உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்ப் பால் சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியை சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.