இந்த ஆய்வுக்காக, தரையில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மீது அப்பாக்கள் தங்களுடைய மூன்று மாதக் குழந்தைகளுடன் பொம்மைகளின்றி விளையாட வைக்கப்பட்டனர். அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. அதன் பின், குழந்தைக்கு 2 வயதான சமயத்தில், ஓர் புத்தக வாசிப்பு அமர்வின்போது மீண்டும் குழந்தைகளுடன் அப்பாக்கள் விளையாட வைக்கப்பட்டனர்.
இந்த இரு தருணங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோக்கள், தனிப் பயிற்சி பெற்ற ஆய்வாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. மொத்தம் 128 தந்தைகள், அவர்களது குழந்தைகளின் தகவல்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆண் அல்லது பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் சரி, அப்பாக்கள் நெருக்கமாக இருந்த குழந்தைகள் பல்வேறு திறன் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தன. அதிகம் விலகியிருந்த அல்லது மன அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்களின் குழந்தைகள், குறைவான மதிப்பீட்டைப் பெற்றிருந்தன.