இரவு உணவை தாமதமாக சாப்பிடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. சாப்பிட்ட உணவு செரிமானமாவதற்கு போதிய நேரம் கொடுக்காமல் உடனே தூங்குபவர்களும் இருக்கிறார்கள். இரவு உணவை சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? என்ற கேள்விக்கு மாலை 6 மணி முதல் 8 மணி என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது. ஏன் தெரியுமா?
இரவில் சீக்கிரமாக சாப்பிடும்போது உடல் உணவை நன்றாக ஜீரணிக்கும். இரவு தாமதமாக சாப்பிடுவது நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும். தூக்கத்தையும் பாதிக்கக்கூடும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதையும் கடினமாக்கும்.
தாமதமாக இரவு உணவு உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதையும் பாதிக்கக்கூடும்.
தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை சாப்பிட்டு விடுங்கள். வழக்கமாக இரவு 10 மணி அளவில் தூங்கினால், இரவு 7 மணிக்குள் இரவு உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். உடல் நன்றாக ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இரவு தூக்கம் தேவை. உடலின் மற்ற பாகங்கள் தூங்க முயற்சிக்கும்போது, வயிற்றை அதிக நேரம் வேலை செய்ய வைக்காதீர்கள்.