அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும்.
* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.
* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.
* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.
பரிசோதனை முறைகள்:
* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.
* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா, காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.
* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.