ஆரோக்கியம்

திருமண பந்தம் முறிவதற்கான காரணங்கள்

கணவன் - மனைவிக்கு இடையேயான அன்யோன்யம், அன்பு. ஆனால், இவை மெள்ள மெள்ள காலாவதியாகிவருவதுதான் மணமுறிவுச் சிக்கலுக்கான அடிப்படையாகும்.

மாலை மலர்

* சிறு வயது முதலே உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவர்களாக (அவர்கள் பெற்றோர்கள் உணர்வு வெளிப்பாட்டை கண்டித்திருப்பதால்கூட இருக்கலாம்) இருப்பதும் ஒரு காரணமாகியிருக்கலாம்.

* உடல்ரீதியாக தாய்-தந்தையரைவிட்டுப் பிரிந்திருந்தாலும், மனதளவில் பிரிய முடியாமல் இருப்பதால் ஏற்படும் சிக்கல்.

* சந்தேக உணர்வு அதிகமாக இருப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் வரும்.

* 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைவாகவும், புரிதலில் சிக்கலும் ஏற்படலாம்.

* கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்களிடையே மன ஒற்றுமை சீர்குலைய வழி ஏற்படலாம்.

* கணவர், அவர் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக இருந்து, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டதினாலேயேகூட இருவருக்கும் புரிதல் இல்லாமல் போகக்கூடும்.

* திருமணம் ஆன உடனேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதால், மண வாழ்க்கையில் பக்குவப்படுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் ஆகிவிடும்போது சிக்கல் ஆரம்பித்துவிடுகிறது.

* திருமணத்துக்குப் பிறகு குழந்தைப்பேறு அமையாதது மணமுறிவுக்கு முக்கியக் காரணம்.

* பாலியல் பிரச்சனைகள் மற்றும் திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது, குடி அல்லது போதைப் பழக்கம் போன்ற காரணங்களும் விவாகரத்துக்குக் காரணங்களாகின்றன.