ஆரோக்கியம்

பொடுகு, அரிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது.

மாலை மலர்

பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. பொடுகு, அரிப்பை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்.

ஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள். சொறி, சிரங்கு, கட்டி, பேன், பொடுகு அனைத்தும் நீங்கி தலை சூப்பர் சுத்தமாகிவிடும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.

சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை மறையும்.