வெள்ளரிக்காய் - 4,
கோதுமை மாவு - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிட்டிகை,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு, தண்ணீர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், வெள்ளரிக்காய் துருவல், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான வெள்ளரிக்காய் கோதுமை தோசை ரெடி.