குக்கிங் சாக்லெட் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 3/4 கப்,
பொடித்த நட்ஸ் - தேவையான அளவு.
செய்முறை :
* கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும்.
* மற்றொரு பாத்திரத்தில் சாக்லெட் அல்லது சாக்கோ சிப்புகளைப் போட்டு கொதிக்கும் கடாயின் மேல் வைக்கவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சாக்லெட்டை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
* சாக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும்.
* இப்போது நட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சாக்லெட் சாஸுடன் சேர்த்து, வேகமாகக் கலக்கவும்.
* நன்றாக கலக்கிய இந்தக் கலவையை சின்ன பேப்பர் கப்புகளில் ஸ்பூனால் எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும்.
* சூப்பரான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் ரெடி.