குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்களின் உடல் வளர்ச்சி மட்டும் அல்ல, அறிவாற்றல் வளர்ச்சியும் தான். அதனை மேம்படுத்த உதவும் செயல்முறைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
குழந்தைகளின் அறிவை வளர்க்கும் விதமாக சதுரங்கம், புதிர் விளையாட்டுகளை கற்றுக்கொடுத்து விளையாட ஊக்கப்படுத்தலாம். இந்த விளையாட்டுகள் அவர்களின் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு உதவும்.
குழந்தைகளுக்கு கேள்வி கேட்க கற்றுக்கொடுங்கள். ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏன்? எதற்கு? எப்படி ? என கேள்வி கேட்க சொல்லுங்கள். பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறுங்கள்.
குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிக்கும்போது அந்த பாடம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் காட்டுங்கள். அவை அவர்களின் கற்பனை திறனை வளர்ப்பதோடு பாடங்களில் கவனம் செலுத்தவும் உதவும்.
ஒரே நேரத்தில் பல விஷயங்களை கற்பதும், புரிந்துகொள்வதும் குழந்தைகளுக்கு கடினமாக தோன்றும். எனவே, கற்றல் செயல்பாடுகளுக்கு இடையே மூளைக்கு ஓய்வு அளிக்கும் விதமாக 10 நிமிடம் ஓய்வெடுக்க அனுமதி அளியுங்கள்.
பாடங்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள அதனை இசை வடிவில் பாடல்களாக குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது பாடங்கள் மீதமான ஈர்ப்பையும் அதிகரிக்கும்.
தவறுகளில் இருந்துதான் நாம் பல விஷயங்களை கற்கிறோம். அந்த வகையில் குழந்தைகள் தவறு செய்தால் தண்டிக்காமல், அதனை திருத்திக்கொள்வது எப்படி என கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை அளிப்பது அவசியம். அந்தவகையில் ஆன்டி ஆக்சிடென்டுகள், ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அளியுங்கள்.
குழந்தைகள் முன்பு மன நிம்மதியை பாதிக்கும் விஷயங்களை செய்யாதீர்கள். குறிப்பாக குடும்ப பிரச்சனைகளை அவர்கள் முன்பு பேசி வாக்குவாதத் தில் ஈடுபடாதீர்கள். அது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். மன அழுத்தம் அல்லது மன இறுக்கத்திற்கு ஆளாக்கிவிடும்.