ஆரோக்கியம்

சத்து நிறைந்த கேரட் - கேழ்வரகு அடை

கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேரட், கேழ்வரகு வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலை மலர்

தேவையான பொருட்கள் : 

கேழ்வரகு மாவு - ஒரு கப், 

கேரட் - 100 கிராம், 

கொத்தமல்லித் தழை - சிறிதளவு, 

பச்சை மிளகாய் - சிறிதளவு, 

புளித்த தயிர் - அரை கப், 

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை : 

கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சைமிளகாய், கேரட்டை சேர்த்து வதக்கவும். 

கேரட் சிறிது வதங்கியதும், அதில் கொத்தமல்லி, புளித்த தயிருடன் அரை கப் தண்ணீர் சேர்த்து உப்பு, பெருங்காயத்தூளை போட்டு கொதிக்க விடவும். 

நன்றாக கொதித்ததும் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக போட்டுக் கைவிடாமல் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும். 

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு அடைகளாக சுட்டெடுக்கவும். 

சூப்பரான கேரட் - கேழ்வரகு அரை ரெடி.

விருப்பப்பட்டால் கிளறும்போது சிறிது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். 

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.