கேரட் ஆரஞ்சு ஜூஸ் 
ஆரோக்கியம்

எலும்பு, கண் ஆரோக்கியத்திற்கு உகந்த ஜூஸ்

கேரட், ஆரஞ்சு பழத்தில் செய்யும் ஜூஸ் நமது எலும்புகள் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

மாலை மலர்

கேரட் - 2,
ஆரஞ்சு பழம் - 1,

எலுமிச்சை - 1 டீஸ்பூன்

முதலில் கேரட், ஆரஞ்சு பழம், எலுமிச்சை ஆகியவற்றை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

2 கேரட்டை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து ஜூஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே போன்று ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டாக நறுக்கி ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.

கால் கப் தண்ணீரில் இரண்டு ஜூஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு விட்டால் ஜூஸ் தயாராகிவிடும்.

உடல் எடையை குறைக்கும் ஜூஸ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.