ப்ரோக்கோலி - 1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
ப்ரோக்கோலியை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய ப்ரோக்கோலி துண்டுகளை ஸ்டீமரில் வைத்து 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ப்ரோக்கோலி வெங்காயத்துடன் கலந்து லேசாக சூடானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
ப்ரோக்கோலி பொரியல் ரெடி.